உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரு கன்றுகளை ஈன்ற பசு மாடு

இரு கன்றுகளை ஈன்ற பசு மாடு

கோபிசெட்டிபாளையம்: கோபியில் பசு மாடு இரு கன்று குட்டிகளை ஈன்றது. கோபி குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ்; விவசாயி. பொலகாளிபாளையம் கால்நடை மருத்துவமனையில், தனது பசு மாட்டுக்கு செயற்கை கருவூட்டல் செய்திருந்தார். நிறை மாதமாக இருந்த பசு மாடு மூன்று நாட்களுக்கு முன் கன்றை ஈன்றது. கால்நடை டாக்டர் சண்முகவடிவு சிகிச்சை அளித்தார். அந்த பசு மாடு முதலில் ஒரு காளை கன்றை ஈன்றது. அடுத்த சில நிமிடங்களில் கிடாரி கன்றை ஈன்றது. வழக்கமாக, பசு மாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈனும். ஆனால், இந்த மாடு இரு கன்றுகளை ஈன்றதால், விவசாயி தங்கராஜ் மகிழ்ச்சி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை