உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூப்பர்வைசர் தற்கொலை

சூப்பர்வைசர் தற்கொலை

பெருந்துறை: பெருந்துறை, சென்னிவலசை சேர்ந்தவர் மணிகண்டன், 35; தனியார் நிறுவன சூப்பர்வைசர். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், வீட்டுக்கு சரியாக பணம் கொடுக்க முடியவில்லை. அதேசமயம் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடனையும் கட்ட முடியாத நிலையில் விரக்தி அடைந்தார். வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

வைக்கோல் ஏற்றிய வேன் சாலையில் எரிந்ததால் பகீர்

தாராபுரம்: தாராபுரத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிய ஈச்சர் வேன், குண்டடம், குழந்தைபாளையத்துக்கு நேற்று சென்றது. மதியம், ௧:௦௦ மணியளவில், குண்டடம்-பொன்னாபுரம் சாலையில் சென்றபோது, வாகனத்தில் இருந்து புகை வரவே, சாலையில் சென்றவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் டிரைவர் மகேஸ்வரன், உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினார். அப்போது வைக்கோல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.உடனடியாக தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சிறிது நேரம் போராடி, தீயை அணைத்தனர். ஆனால், வைக்கோல் மற்றும் வேனின் கேபின் முற்றிலும் எரிந்து விட்டது. இவற்றின் மதிப்பு, மூன்று லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி