உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல அலுவலர்களுக்குதேர்தல் பயிற்சி வழங்கல்

மண்டல அலுவலர்களுக்குதேர்தல் பயிற்சி வழங்கல்

ஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணி செய்யும் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் பயிற்சி வழங்கினர். தொகுதியில், 53 இடங்களில், 237 ஓட்டுச்சாவடிகளில் தலா 5 அல்லது 6 முதல், எட்டு ஓட்டுச்சாவடிக்கு ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி மண்டல அலுவலர் நியமிக்கப்படுவர். ஓட்டுச்சாவடிக்கு தேவையான பயன்பாட்டு பொருட்கள், பணி செய்யும் தேர்தல் அலுவலர் எண்ணிக்கையை உறுதி செய்து, தேவை அடிப்படையில் கூடுதல் நபர் நியமனம், விடுப்பு, உடல் நலக்குறைவால் மாற்றம் செய்ய வேண்டியவரை விடுவித்து, மற்றொரு நபரை பணி செய்ய அனுமதித்தல் போன்ற பணியும் இவர்கள் செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு நாளில் இயந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு சென்று, பழுது, பிற பிரச்னைகள் ஏற்பட்டால் பழுது நீக்கம், மாற்றி அமைத்தல் பணியும், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு சேர்ப்பது வரை, இவர்களது பொறுப்பாகும். இதுபற்றிய முழு விபரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி, பயிற்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை