சென்னிமலையில் வெடிச்சத்தம்பொருட்கள் அதிர்ந்ததால் அச்சம்
சென்னிமலையில் வெடிச்சத்தம்பொருட்கள் அதிர்ந்ததால் அச்சம்சென்னிமலை,: சென்னிமலை பகுதியில் நேற்று மதியம், 12:00 மணியளவில், பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள், பொருட்கள் அதிர்ந்தன.ஓடும் வாகனத்தில் டயர் வெடித்தால் கிளம்பும் சத்தத்தை விட, பல மடங்கு கூடுதலாக சத்தம் கேட்டதாக, மக்கள் தெரிவித்தனர். சத்தம் கேட்ட திசையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களும் சத்தம் கேட்டதாக கூறினர். இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். வெடி சத்தத்தால் அம்மாபாளையம் பகுதியில் பல வீடுகளில் ஜன்னல், கதவுகள் அதிர்ந்துள்ளன. ஆனாலும், சத்தம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை.