வணிக வரித்துறையினர் ஆர்ப்பாட்டம்
வணிக வரித்துறையினர் ஆர்ப்பாட்டம்ஈரோடு:தமிழ்நாடு உதவி ஆணையாளர், வணிக வரி அலுவலர் மற்றும் துணை வணிக வரி அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மஞ்சுரேக்கா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஓய்வு பெற்றோர் அனைத்து துறை அலுவலர் சங்க நிர்வாகி கதிர்வேல் பேசினர். கூடுதல் பணியிடங்களை உருவாக்கி அலுவலர்களின் வேலைப்பளுவை குறைக்க வேண்டும். பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். வரி விதிப்பு ஆணைகளில் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் வழங்காமல், தரத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அலுவலகத்தில் இருந்து ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.குடியிருப்புகளை