கடைமடையை அடைந்த பி.ஏ.பி., வாய்க்கால் நீர்
கடைமடையை அடைந்த பி.ஏ.பி., வாய்க்கால் நீர்பொங்கலுார்:பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு ஜன., மாத இறுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டாம் சுற்று தண்ணீர் பிப்ரவரியில் திறந்திருக்க வேண்டும்.ஆனால், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது. பி.ஏ.பி., தண்ணீரை நம்பி சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகத் துவங்கின. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் சுற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அது தற்போது கடைமடை வரை சென்றடைந்துள்ளது.கடைமடைக்கு குப்பைகள் தண்ணீருடன் சேர்ந்து வந்தன. இருப்பினும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.