உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் மஞ்சப்பை திட்டம்துணை கமிஷனர் அறிவுரை

ஈரோட்டில் மஞ்சப்பை திட்டம்துணை கமிஷனர் அறிவுரை

ஈரோட்டில் மஞ்சப்பை திட்டம்துணை கமிஷனர் அறிவுரைஈரோடு:ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில், துணை கமிஷனர் தனலட்சுமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். துணை கமிஷனர் தனலட்சுமி பேசுகையில்,''ஈரோடு மாநகராட்சியில் வரும், 31க்குள் வணிகர்களின் தொழில் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய உரிமம் வாங்க விண்ணப்பிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த, ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். 100 சதவீத தொழில் வரியை வரும், 31க்குள் வசூலிக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தும் வகையில், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை