உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எரங்காட்டூர் பெண் தற்கொலைபெருந்துறையில் சாலை மறியல்

எரங்காட்டூர் பெண் தற்கொலைபெருந்துறையில் சாலை மறியல்

எரங்காட்டூர் பெண் தற்கொலைபெருந்துறையில் சாலை மறியல்பெருந்துறை:டி.என்.பாளையத்தை அடுத்த எரங்காட்டூரை சேர்ந்தவர் ேஹமப்பிரியா, 38; டைலரான இவர், கடந்த, 2ம் தேதி இரவு வீட்டில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஹேமப்பிரியா உடற்கூறு பரிசோதனை நேற்று நடந்தது. உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, குன்னத்துார் நால்ரோட்டில் மாலையில் மறியலில் ஈடுபட்டனர். பெருந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஹேமப்பிரியா கோபியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை கட்டாததால், அந்நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்தவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ