மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
28-Mar-2025
ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த முதியவர் பலி ஈரோடு:ஆனங்கூர் - சங்ககிரி இடையே மூலமங்கலம் பகுதியில், 65 வயது மதிக்கதக்க ஆண் சடலம் நேற்று முன்தினம் மதியம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் இருந்து கோவை செல்லும், கோவை சூப்பர் பாஸ்ட் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. இறந்தவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கையில் காப்பு அணிந்து இருந்தார். சிமென்ட் கலர் பேன்ட், மஞ்சள் கலர் மற்றும் கருப்பு கலரில் இரு சட்டைகளை அணிந்து இருந்தார். ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Mar-2025