உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முகூர்த்த சீசன் இல்லாததால்சம்பங்கி கிலோ 50 ரூபாயாக குறைவு

முகூர்த்த சீசன் இல்லாததால்சம்பங்கி கிலோ 50 ரூபாயாக குறைவு

முகூர்த்த சீசன் இல்லாததால்சம்பங்கி கிலோ 50 ரூபாயாக குறைவுபுன்செய்புளியம்பட்டி:முகூர்த்த சீசன் இல்லாததால், ஒரு கிலோ, 250 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ நேற்று, 50 ரூபாயாக சரிந்தது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தமங்கலம், பகுத்தம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி, தாண்டாம்பாளையம், எரங்காட்டூர் ஆகிய கிராமங்களில், சம்பங்கி பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு, சம்பங்கி பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கோவில் திருவிழாக்கள், முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு கட்டப்படும் மாலைகளில் சம்பங்கி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், சீசன் சமயத்தில் விலை அதிகமாக இருந்தாலும், விற்பனை குறையாமல் இருந்து வந்தது. தற்போது சம்பங்கி பூ வரத்து அதிகமாக உள்ளது. அதேசமயம் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாசி மாத முகூர்த்த சீசனை முன்னிட்டு, ஒரு கிலோ சம்பங்கி, 200 முதல், 250 ரூபாய் வரை விற்றது. கடந்த சில நாட்களாக, விலை மிகவும் சரிந்து ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில்,' விசேஷம் மற்றும் முகூர்த்தம் இல்லாததால், சம்பங்கி பூ விலை குறைந்துள்ளது. சித்திரை மாதத்தில் கோவில் விசேஷங்கள் துவங்க உள்ளதால், அப்போது அதன் விலை அதிகரிக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ