மேலும் செய்திகள்
ரூ.50 லட்சம் மோசடி இரு சகோதரர்கள் கைது
16-Mar-2025
கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் கும்பல் கைதுஈரோடு:ஈரோடு, பெரியசேமூரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 29; இவருடைய சகோதரர் சிலம்பரசன். இருவரும் சேர்ந்து சூளை பகுதியில் கார் பட்டறை நடத்தி வருகின்றனர். கடந்த, 23ல் பட்டறை முன் இருவர் அமர்ந்து, மது போதையில் தகாத வார்த்தைகள் பேசி கொண்டிருந்தனர். இதை சகோதரர்கள் கண்டிக்கவே, ஆசாமிகள் இருவரும் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தங்களது கூட்டாளிகளை அழைத்து வந்தனர். ஆறு பேர் கும்பல் பட்டறைக்குள் புகுந்து, சகோதரர்களை சரமாரியாக தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.இதில், ஈரோடு, அசோகபுரம் பகுதி வெங்கடேசன், 25, அரவிந்தன், 20, வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் தமிழ்செல்வன், 30, ராஜேஷ், 25., சந்தோஷ், 20, சரத்குமார், 24, என தெரியவந்தது. ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள்மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
16-Mar-2025