உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டுமா?

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டுமா?

ஈரோடு: வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்த, வேலைவாய்ப்பற்றோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெறாதவருக்கு 100 ரூபாய், தேர்ச்சி பெற்றவருக்கு 150 ரூபாய், ப்ளஸ் 2 படித்தவருக்கு 200 ரூபாய், பட்டதாரிக்கு 300 ரூபாய் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுக்கு மேல் தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு ஆகியிருக்க வேண்டும்.எஸ்.ஸி., எஸ்.டி., பிரிவினருக்கு 2011 செப்டம்பர் 30ம் தேதி 45 வயதையும், மற்றவர்களுக்கு 40 வயதையும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருவாய் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு வருமான உச்ச வரம்பு இல்லை.விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கக்கூடாது. அஞ்சல் வழியில் கற்கலாம். முற்றிலுமாக வேலை வாய்ப்பு இல்லாதவராகவும், சுய வேலைவாய்ப்புகூட செய்யாதவராக இருக்க வேண்டும். முழுமையாக தமிழகத்தில் படித்திருக்க வேண்டும். அல்லது அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழகத்தில் 15 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் எந்த ஒரு நிதியுதவியையும் பெறுபவராக இருக்கக்கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் படித்தவர்கள் இத்தொகை பெற முடியாது.ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, தேசிய வங்கியில் கணக்கு துவங்கி, அதற்கான பாஸ் புத்தகம், பிற சான்றுகளுடன் ஆகஸ்ட் 31க்குள் வழங்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று, சுய உறுதி ஆவணம் வழங்காதவர்கள், ஆகஸ்ட் 31க்குள் வழங்கி தொடர்ந்து உதவித்தொகை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை