உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்வி கட்டண கொள்ளைமாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி கட்டண கொள்ளைமாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பால சந்திர போஸ் கோரிக்கை குறித்து பேசினார்.தேவையற்ற பாடங்களை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளியின் கட்டாய கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். கும்பகோணம் தீ விபத்து நடந்த, ஜூலை16ம் தேதியை, 'கல்வி கட்டண கொள்ளை' தினமாக, இந்திய மாணவர் சங்கம் கடைபிடிக்கிறது.கட்டண முறைகேடுகளை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு, நீதிபதி கோவிந்தராஜன், கமிட்டி நீதிபதி ராஜபாண்டியன் ஆகியோர் நிர்ணயித்த கட்டணத்தையே அனைத்து தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கனிமொழி, மாநகர செயலாளர் கவுதம், மாவட்ட குழு உறுப்பினர் யுவராஜ் உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்