அஞ்சல் ஓய்வூதியர்குறைகேட்பு கூட்டம்
அஞ்சல் ஓய்வூதியர்குறைகேட்பு கூட்டம்ஈரோடு,: கோவை அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட ஓய்வூதியதாரர் குறை கேட்பு கூட்டம் பிப்., 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு வீடியோ கான்பரன்ஸில் நடக்கிறது.குறை, கோரிக்கை, புகார்களை, தபால் அல்லது மின்னஞ்சலில் வரும், 30ம் தேதிக்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். சட்டம் சம்மந்தப்பட்ட குறை, புகார்கள்; கொள்கை சம்பந்தமான குறை, புகார்கள் கூட்டத்தில் ஏற்கப்படாது என்றும், ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.