வளர்ச்சி திட்டப்பணிகள்குறித்து ஆலோசனை
வளர்ச்சி திட்டப்பணிகள்குறித்து ஆலோசனைஈரோடு, :ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். வருவாய், ஊரக வளர்ச்சி, குடிநீர் வழங்கல் துறை உட்பட அனைத்து துறைகளிலும் நடக்கும் வரும் வளர்ச்சி திட்டப்பணி, கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப் கலெக்டர் சிவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.