ஏ.டி.எம்..மில் கள்ளநோட்டுமூங்கில் கடைக்காரர் கைது
ஏ.டி.எம்..மில் கள்ளநோட்டுமூங்கில் கடைக்காரர் கைதுஈரோடு:சிவகிரி, சந்தைமேட்டை சேர்ந்தவர் ராமு, 52; மூங்கில் கடை வைத்துள்ளார். நேற்று முன் தினம் சிவகிரி ஜி.ஹெச்., அருகே இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு சென்று, 100 ரூபாய் நோட்டுகளாக, 4,500 ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். மிஷினில் பணம் ஏற்கப்பட்ட நிலையில் வங்கி கணக்கில் சேரவில்லை. இந்நிலையில், 4,500 ரூபாய் கள்ளநோட்டு மிஷினில் இருப்பதாக வங்கி மேலாளருக்கு தகவல் காட்டியது. இதுகுறித்து சிவகிரி போலீசில் புகார் தரப்பட்டது. மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் ராமு சிக்கினார். விசாரணைக்குப்பின் அவரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். பணத்தை யாரிடம் ராமு பெற்றார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.