உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைது

பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைது

பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைதுகரூர்:க.பரமத்தி அருகே, டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளரிடம், கத்தியை காட்டி பணம் பறித்த, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி பூலாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ், 38; டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளர். இவர் கடந்த, 8ல், க.பரமத்தி அருகே துலுக்காம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் சென்ற கரூர் மாவட்டம், கடவூரை சேர்ந்த தங்கரத்தினம், 26, ஜெயசூர்யா, 20, ஆகியோர், பால்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4,000 ரூபாயை பறித்து சென்றனர்.இதுகுறித்து, பால்ராஜ் அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி தங்கரத்தினம், ஜெயசூர்யா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை