உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குருநாதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்

குருநாதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்

அந்தியூர் : அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில், நடப்பாண்டு ஆடி தேர்த்திருவிழா, கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுத-லுடன் தொடங்கியது.இந்நிலையில் நாளை காலை, குருநாதசுவாமி வனக்கோவிலில், கொடியேற்றம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். வரும், 31ல் முதல் வன பூஜை, ஆக., 7ம் தேதி தேர்திருவிழா துவங்குகிறது. 8, 9, 10 தேதிகளில் தென்னிந்திய அளவில் பிர-சித்தி பெற்ற கால்நடை சந்தை கூடுகிறது. இதில்லாமல் பொழுது-போக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன. இதற்கான ஏற்பாடு-களை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ