உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்து

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்து

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்துஈரோடு,:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து குறைவாகவே மாடுகள் கொண்டு வரப்பட்டன.இதுபற்றி சந்தை நிர்வாகத்தினர் கூறியதாவது: சந்தைக்கு, 6,000 ரூபாய் மதல், 22,000 ரூபாய் மதிப்பில், 20 கன்று; 22,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 100 எருமை, பசு மாடுகள்; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், 30 கலப்பின மாடுகளும் வரத்தாகின.தமிழகத்தின் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகள் வாங்க வந்தனர்.பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் பணம் எடுத்து வருவதிலும், கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. வரத்தான மாடுகளில், 30 மாடுகள் தவிர மற்றவை விற்பனையாகின. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி