உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.50 கோடி பறிமுதல்

ரூ.1.50 கோடி பறிமுதல்

ரூ.1.50 கோடி பறிமுதல்ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நிலை கண்காணிப்பு குழுவினர், அக்ரஹாரம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் டெம்போ டிராவலர் சிறிய வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தில், 1.50 கோடி ரூபாய் இருந்தது. ஆனால், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. மீதி, 1.10 கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் இல்லாததால், 1.50 கோடி ரூபாயுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர். * ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள், காதர்மஸ்தான் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த 'டாடா அல்ட்ராஸ்' காரில் வந்த, மதுரையை சேர்ந்த நரசிம்மகுமாரிடம், 4 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை