விளையாட்டு விடுதி மாணவியருக்கு சீருடை
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத் தில், தமிழ்-நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 86 மாணவி-யருக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் வரவேற்றார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சீருடை வழங்கினார். உயர்ரக டிராக் சூட், தலா, 2 'டி-ஷர்ட்' வழங்கப்பட்டது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே-யான கால்பந்து, கையுந்து பந்து போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றதற்கான சான்றிதழ், பதக்கங்களை, கலெக்டரிடம் காண்-பித்து வாழ்த்து பெற்றனர். விடுதி மேலாளர் ரோஸ் பாத்திரமா-மேரி, பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.