உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் பாய்ந்து தற்கொலை 12 கி.மீ., இழுபட்ட உடல்

ரயிலில் பாய்ந்து தற்கொலை 12 கி.மீ., இழுபட்ட உடல்

ஈரோடு,:ஈரோடு அருகே சாவடிபாளையம் ரயில்வே ஸ்டேஷனை, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், மே, 31 காலை கடந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஆண், ரயில் முன் பாய்ந்தார். ஸ்டேஷனை ரயில் கடந்தவுடன் அங்கிருந்தவர்கள் ரயிலில் பாய்ந்த நபரை தேடிப் பார்த்தனர். ஆனால், உடல் கிடைக்கவில்லை.இந்நிலையில், ஈரோடு ஸ்டேஷனில் பெட்டிகளை சோதனை செய்தபோது, முன்பதிவு பெட்டியின் அடியில் இறந்த நபரின் உடல் சிக்கியிருந்தது தெரிந்தது.ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். இறந்தவர் விபரம் தெரியவில்லை. ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தவரின் உடல், 12 கி.மீ., துாரம் இழுத்து வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்