உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 150 கோவில்களுக்கு விழா நடத்த அனுமதி

150 கோவில்களுக்கு விழா நடத்த அனுமதி

ஈரோடு: லோக்சபா தேர்தல் முடிந்தாலும், நடத்தை விதிகள் இன்னும் அமலில் உள்ளது. இதனால் பொது இடங்களில் விழா, நிகழ்ச்சிகள் நடத்த, தேர்தல் கமிஷன் ஒப்புதலை பெற வேண்டும். இதன்படி மாநகரில் சித்திரை, வைகாசி திருவிழா நடத்த, மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி கேட்டு விழா தரப்பினர், மக்கள் படையெடுத்தனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வலம்புரி கற்பக விநாயகர் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில் திருவிழா, கனிராவுத்தர் குளம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட கோவில்களில் விழா நடத்த, உதவி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான சிவகிருஷ்ணமூர்த்தி அனுமதி அளித்துள்ளனர். திருமணம், காதணி விழா என, 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்