உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடி 18ல் நீர் நிலைகளில் 200 போலீசார் பாதுகாப்பு

ஆடி 18ல் நீர் நிலைகளில் 200 போலீசார் பாதுகாப்பு

ஈரோடு: ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மாவட்ட முக்கிய நீர் நிலை-களில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆடி 18 ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்-நாளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் பொது-மக்கள் புனித நீராடுவர். முன்னோர் வழிபாடு, சப்த கன்னிமார் வழிபாடு, புதுமண தம்பதிகள் தங்களது தாலி கயிறை மாற்றி கட்-டுதல் மற்றும் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகள், முளைப்பாரிகளை ஆற்றில் விட்டு, தீபம் ஏற்றி வழிபடுவர். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு வரும் ஆக.,3ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் காலை முதல் மாலை வரை நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவர். மாவட்டத்தில் முக்கிய நீர் நிலைகளான பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடு-முடி மகுடீஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதே போல் கொடிவேரி அணை, பவானிசாகர் அணை பகு-தியில் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க அந்தந்தந்த பகுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.அதேசமயம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை இருப்பதால், உபரி நீர் காவிரி ஆற்றில் நேரடியாக வெளி-யேற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் ஆற்றில் ஆற்றில் குளிக்க, காவிரி கரையோரம் மக்கள் ஒன்று கூட ஆடி 18 தினத்தில் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ