சீனாபுரத்தில் 221 மது பாட்டில் பறிமுதல்; இரண்டு பேர் கைது
சீனாபுரத்தில் 221 மது பாட்டில் பறிமுதல்; இரண்டு பேர் கைதுஈரோடு:மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெருந்துறை அருகே சீனாபுரத்தில், 221 மதுபாட்டில்களை விற்க வைத்திருந்த, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த அரவிந்த்குமார், 29; சிவகங்கை, தேவகோட்டை காளீஸ்வரன், 21, ஆகியோரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல் ஈரோடு கனிராவுத்தர் குளம் டாஸ்மாக் அருகே நேற்று முன்தினம் காலை, 33 மதுபாட்டிலுடன், சரவணன், 44, என்பவரை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்துார் ஆகும்.