உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 302 மதுபாட்டில் 2 நாளில் பறிமுதல்

302 மதுபாட்டில் 2 நாளில் பறிமுதல்

ஈரோடு:ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீசார், நேற்று காலை மலையம்பாளையம் வேலப்பம்பாளையத்தில் சோதனை நடத்தினர். இதில் கொடுமுடி வேலநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தனிடம், 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். இதே போல் மொடக்குறிச்சி, சின்னம்மாபுரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம், 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கைது செய்தனர்.நேற்று முன் தினம் ஈரோடு, கோபி மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஏழு கர்நாடகா மாநில மது பாட்டில் உள்ளிட்ட, 172 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி