உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தந்தங்களுடன் 4 பேர் கைது

தந்தங்களுடன் 4 பேர் கைது

அந்தியூர்: அந்தியூர் அருகே குருநாதசுவாமி வனக்கோவிலில், நேற்று முன்-தினம் பூச்சாட்டு நிகழ்வு நடந்தது. இதை காரணம் காட்டி, யானை தந்தங்கள் கைமாற்றப்படுவதாக, அந்தியூர் வனத்துறையி-னருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்து-றையினர், இனோவா காரில் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.நாமக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி குணசேகரன், 34; கடலுார் மாவட்டம் ஆலம்பாடி சாந்தப்பா, 50; சேலம் மாவட்டம் பாரப்-பட்டி கந்தசாமி, 45; கோவை ராம்நகர் செந்தில்குமார், 43, என தெரிந்தது. எண்ணமங்கலம் பகுதியில் ஒரு நபரிடம் தந்தங்-களை வாங்கி, வேறு ஒருவரிடம் விற்பனை செய்ய காத்திருந்தது தெரிந்தது. எண்ணமங்கலம் ஏரி அருகே தந்தம் பதுக்கி வைக்கப்-பட்டிருப்பதாக கூறினர். அங்கு சென்ற வனத்துறையினர், மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தந்தங்களை கைப்பற்றினர். இந்த நான்கு பேரும் புரோக்கராக செயல்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு தந்தம் விற்றவர்கள், இவர்களிடம் இருந்து தந்தம் வாங்கி செல்வதாக இருந்தவர்கள் என ஆறு பேரை தேடி வருவதாக, அந்தியூர் வனத்-துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை