உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 27 அடி உயர ருத்ராட்ச லிங்கத்துக்கு வேள்வி

27 அடி உயர ருத்ராட்ச லிங்கத்துக்கு வேள்வி

தாராபுரம்: உலக சித்தர்கள் ஞானபீடம் சார்பில், தாராபுரத்தில் நேற்று முன்-தினம் உலக சித்தர்கள் மாநாடு துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று மாலை, ஐந்து லட்சம் ருத்ராட்சங்களால் அமைக்கப்பட்ட, 27 அடி உயர சிவலிங்கத்தின் முன், யாக வேள்வி நடந்தது. சிவ வாத்தியம் முழங்க சித்தர்கள், சங்குகளை ஊதி ஆர்ப்பரித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து சிவனடியார் உள்பட திரளான பக்-தர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, உலக சித்தர்கள் ஞானபீட தலைவர் ரத்-னமாணிக்கம், பதினெண் சித்தர் சித்த வைத்திய ஆராய்ச்சி மைய நிறுவனர் கணபதி குடும்பனார் மற்றும் சிவனடியார்கள் செய்தி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ