| ADDED : ஜூலை 18, 2024 01:57 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.ஈரோடு பெரிய சேமூர் ஈ.பி.பி. நகர், பி.பி. கார்டனை சேர்ந்தவர் ஜெகதீசன், 50. ஈரோடு மாநகராட்சி, 12வது வார்டு, தி.மு.க. கவுன்சிலர். நேற்று முன் தினம் இரவு ஈரோடு மாணிக்கம் பாளையம் சாலை பாலாஜி பேக்கரி பின்புறம் வசிக்கும் மூத்த மகள் கனிமொழியை வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு இரவு, 11:45 மணிக்கு வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முதல் மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று கூறி வீட்டில் திருட வந்த வாலிபரை பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்-தனர். பின்னர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்-தனர். விசாரணையில் செங்கல்பட்டு, குன்னவாக்கம், அம்பேத்கர் முதல் தெரு, வள்ளி கண்ணன் மகன் மோகன் குமார், 33, என தெரியவந்தது. மோகன் குமாரை வீரப்பன்சத்திரம் போலீசார், ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.