உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உறுதி

வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உறுதி

ஈரோடு: ஈரோடு தி.மு.க., வேட்பாளர் பிரகாைஷ ஆதரித்து, குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓசுவக்காடு, குட்டிக்கிணத்துார், மஞ்சுபாளையம், கொல்லப்பட்டி, மக்கிரிபாளையம், வால்ராசம்பாளையம் உட்பட பல இடங்களில் நேற்று பிரசாரம் நடந்தது. குமாரபாளையத்தில் வேட்பாளரை ஆதரித்து, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:தமிழக அரசு கடந்த, 3 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கான இலவச பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை போன்ற திட்டங்கள் மக்களிடம் கடும் வரவேற்பை பெற்றுள்ளன.கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதுபோல, 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும். மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு முறை வழங்கப்படும். பெட்ரோல் ஒரு லிட்டர், 75 ரூபாய், டீசல் ஒரு லிட்டர், 65 ரூபாய்க்கும், காஸ் சிலிண்டர், 500 ரூபாய்க்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பா.ஜ., அரசின் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டு, முன்பு போலவே, மாற்றம் செய்யப்படும். 'இண்டியா' கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டுமின்றி, மக்களின் அன்றைய தேவைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்களும் அமல்படுத்தப்படும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ