உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிகளுக்கு தொந்தரவு ஆட்டோ டிரைவர் கைது

சிறுமிகளுக்கு தொந்தரவு ஆட்டோ டிரைவர் கைது

ஈரோடு, ஈரோட்டில், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ டிரைவர், போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு, பெரிய சேமூர் சுப்பிரமணிய நகர் 3வது வீதியை சேர்ந்த கதிரேசன் மகன் மதன் குமார், 27, ஆட்டோ டிரைவர், திருமணமானவர். இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த, 11, 8 வயது சிறுமிகளுக்கு இவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.இதுகுறித்து, சிறுமிகளின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து மதன்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை