உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை இடைத்தேர்தல்:விடுமுறை தர உத்தரவு

நாளை இடைத்தேர்தல்:விடுமுறை தர உத்தரவு

ஈரோடு;விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. இடைத்தேர்தல் நாளில் அச்சட்டசபை தொகுதியில் பதிவு பெற்ற வாக்காளர்களில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்கள் இருப்பின், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை, தொழிலாளர் துறையில் அமைக்கப்பட்டுள்ளது. விடுப்பு குறித்த புகார்கள் இருந்தால், 'டி.ஆனந்தன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), விழுப்புரம், போன்: 99657 11725, என்.பிரகாஷ், தொழிலாளர் துணை ஆய்வாளர் - விழுப்புரம், தொலைபேசி எண்: 95661 21182, சி.உஷாநந்தினி, தொழிலாளர் உதவி ஆய்வர், விழுப்புரம், போன்: 90035 96882, ஈரோடு மாவட்ட அலுவலக எண்: 0424 2270090' என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். இத்தகவலை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ