உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் பைசல் செய்ய முயல்வதாக புகார்

திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் பைசல் செய்ய முயல்வதாக புகார்

ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, பித்தளை தகடுகள், கோபுர கலசங்கள், விளக்குகள், பூஜை தட்டுகள், சொம்பு, குடம், மணி வகை திருட்டு போனது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சூரம்-பட்டி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கோவிலுக்கு சொந்தமான பொருட்களை விற்-பனை செய்ததை கண்டுபிடித்தனர். போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த கடைக்கு சென்று, கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்டு வந்தனர். இதனிடையே கோவில் பொருட்களை திருடி விற்பனை செய்த ஆசாமிகளுக்கு, ஆளும்கட்சி அரசியல் பிரமு-கரின் உறவினர் ஆதரவாக இருப்பதால், அவர்கள் கைது செய்-யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், திருட்-டுப்போன பொருட்கள் கிடைத்ததாக கூறி, போலீசாரும் பிரச்-னையை பைசல் செய்ய தீவிரம் காட்டுவதாக அறநிலையத்துறை-யினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை