உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாட்டு சர்க்கரை விலை சரிவு

நாட்டு சர்க்கரை விலை சரிவு

ஈரோடு: சித்தோடு வெல்ல மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்துக்கு, நாட்டு சர்க்கரை, 3,400 மூட்டை, உருண்டை வெல்லம், 3,100 மூட்டை, அச்சு வெல்லம், 450 மூட்டை வரத்தானது. நாட்டுச்சர்க்கரை மூட்டை, 1,260 ரூபாய் முதல், 1,350 ரூபாய்; உருண்டை வெல்லம், 1,310 ரூபாய் முதல், 1,380 ரூபாய்; அச்சு வெல்லம், 1,380 ரூபாய் முதல், ௧,430 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் வரத்து அதிகரித்தது. கேரளாவில் மழை எதிரொலியால், அச்சு வெல்லம் மூட்டைக்கு, ரூ.60 வரை உயர்ந்தும், உருண்டை வெல்லம், ரூ.30 வரை உயர்ந்தும் விற்பனையானது. நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய் வரை குறைந்தாக, மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை