மனைவி பிரிவால் மனவேதனை; நீதிமன்ற ஊழியர் தற்கொலை
ஈரோடு : ஈரோடு, புது ஆசிரியர் குடியிப்பு காலனி, திரு.வி.க. நகரை சேர்ந்தவர் செல்லதுரை, 33; ஈரோடு மாவட்ட நீதிமன்ற ஊழியர். இவரின் மனைவி இலக்கியா. தம்பதிக்கு குழந்தை இல்லை. கருத்து வேறுபாட்டால் கடந்த ஜன., 28ல் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு இலக்கியா சென்று விட்டார். மனவேதனையில் இருந்த செல்லதுரை கடந்த, 5ல் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்ட சகோதரர் தங்கதுரை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனயில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.* ஈரோடு, முள்ளாம்பரப்பு, கணபதி நகரை சேர்ந்தவர் மாணிக்கம், 59; விவசாய நிலங்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில் செய்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், பணம் தராவிடில் பூச்சி மருந்து குடித்து இறந்து விடுவேன் எனவும் அவ்வப்போது மிரட்டுவாராம். இந்நிலையில் கடந்த, 3ம் தேதி அதிகாலை முள்ளாம்பரப்பு பஸ் ஸ்டாப்பில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.