உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு துறை ஆணையர் உத்தரவுக்கு கோர்ட் தடை

கூட்டுறவு துறை ஆணையர் உத்தரவுக்கு கோர்ட் தடை

திருப்பூர் : தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:ரேஷன் கடைகளில் இருப்பு குறையும் பொருட்களுக்கும், கூடுதலாக உள்ள பொருட்களுக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது._ கடந்த மாதம், 29ம் தேதி, கூட்டுறவு துறை ஆணையர், இந்த அபராத தொகையை இரு மடங்கு உயர்த்தி அறிவித்தார். மாவட்ட இணைப்பதிவாளர்கள் வாயிலாக, கடந்த 5ம் தேதி இந்த உத்தரவு துணை பதிவாளர்கள் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்டது._இந்த உத்தரவை தடை செய்ய வலியுறுத்தி, எங்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இந்த உத்தரவுக்கு எட்டு வார காலம் தடை விதித்து இன்று (நேற்று) உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ