உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி ஊழியர்களுக்கு மோர், கம்மங்கூழ் வழங்கல்

மாநகராட்சி ஊழியர்களுக்கு மோர், கம்மங்கூழ் வழங்கல்

ஈரோடு;கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சியின் அந்தந்த மண்டல அலுவலகங்களில், ஊழியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு மோர், கம்மங்கூழ் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், வரலாறு காணாத அளவுக்கு நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு வெயிலை சமாளிக்கும் வகையில், மாநகராட்சியில் உள்ள அந்தந்த மண்டல அலுவலகங்களில், நீர், மோர், கம்மங்கூழ் நேற்று முதல் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : வெயில் தாக்கத்தால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டினை போக்க, மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், 1,5-00க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கும் நீர், மோர், கம்மங்கூழ் போன்றவை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை, இந்த நற்பணி தொடரும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ