உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு; பா.ஜ., புகார்

தாராபுரத்தில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு; பா.ஜ., புகார்

தாராபுரம்;தாராபுரத்தில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, பா.ஜ.,வினர் புகார் செய்தனர்.நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரிடம், பா.ஜ., நகர தலைவர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தாராபுரம்-உடுமலை ரோட்டில், போக்குவரத்து பணிமனை அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். உணவகம் திறந்து ஆறு மாதமாகியும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை