உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பல்கலை அளவில் சாதனை

ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பல்கலை அளவில் சாதனை

ஈரோடு, நவ. 7-ஈரோடு மாவட்டத்தில், அண்ணா பல்கலை கழகம் மற்றும் முதலமைச்சருக்கான மாவட்டங்கள் தழுவிய விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடந்தது.பல்வேறு கல்லுாரிகளிலிருந்து, 410க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும், நந்தா பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டனர். இதில் முதலமைச்சருக்கான மாவட்டங்கள் தழுவிய கால்பந்து, மேஜைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் வெள்ளி பதக்கம், கபடியில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். இதன் மூலம், மாநில அளவிலான போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றனர்.கிரிக்கெட் போட்டியில் இயந்திரவியல் துறை மாணவன் கபில்ராஜ் இரண்டாம் இடத்தையும், சிலம்பம் போட்டியில் மின்னணு துறை மாணவி தீபா மற்றும் 200 மீ, 400 மீட்டர் ஓட்டத்தில் முதுகலை மேலாண்மை துறை மாணவன் ஸ்ரீதர் ஆகியோர் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். அண்ணா பல்கலை அளவில் நடந்த, பொறியியல் கல்லுாரிகளுக்கிடையேயான ஆண்கள் பிரிவுக்கான கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம், கபடியில் வெண்கலம் பதக்கம் வென்றனர்.மாணவ, -மாணவிகளையும், வழி நடத்திய முதல்வர் ரகுபதி, உடற்கல்வி ஆசிரியர்கள் லெட்சுமணன், தீபனா ஆகியோரை, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் மற்றும் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை