உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூடுதலாக 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

கூடுதலாக 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பவானி:குடிநீர் தேவைக்காக மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை, 15 நாட்களுக்கு நீட்டிக்க, வலதுகரை வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில், முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம், 29ம் தேதி முதல் ஏப்., 11ம் தேதி வரை, குடிநீர் தேவைக்காக, மேட்டூர் வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடும் வெப்பத்தால் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை. இந்நிலையில் வலதுகரை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், முதல்வர், வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'கூடுதலாக இன்னும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் ஆதாரத்தை வழங்க வேண்டும்' என்றும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி