உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பறக்கும் படை சோதனை ரூ.2.88 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.2.88 லட்சம் பறிமுதல்

காங்கேயம் : காங்கேயத்தில் திருப்பூர் சாலை, ஜேசிஸ் பள்ளி அருகில், ரமேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சம்பத்குமார், 28, என்பவரிடம், 1.63 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.வெள்ளகோவில்-முத்துார் சாலை கொங்கு பள்ளி அருகில், சங்கீதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், மதுரை, அலங்காநல்லுாரை சேர்ந்த ஆட்டு வியாபாரி தணிக்கொடியிடம், 1.24 லட்சம் ரூபாயை, ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்து, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.* காங்கேயம் அருகே முத்துாரில், கவிதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டு வியாபாரியான அகிலன், 27, என்பவரிடம், 64 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை