உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மைதானத்தில் கால்பந்து வீரர் மரணம்

மைதானத்தில் கால்பந்து வீரர் மரணம்

ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 45. தனியார் பத்திர எழுத்தரான இவர், டென்-10 என்ற கால்பந்து கிளப் உறுப்பினர். வழக்கம் போல் நேற்று காலை, சங்கு நகரில் உள்ள மைதானத்துக்கு கால்பந்து பயிற்சியில், 7:30 மணிக்கு ஈடுபட்டு கொண்டிருந்தார். 9:00 மணிக்கு திடீரென அவர் மயங்கி மைதானத்தில் விழுந்தார்.அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்சில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ