மேலும் செய்திகள்
பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை
15-Aug-2024
ஈரோடு: கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் நிறுவனர் தின விழா நடந்தது. நடேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை, அம்மாருன் என்விரோகார்ட் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்-குனர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார். சிறந்த சமூக சேவ-கர்கள், ௧௩ பேரை தேர்வு செய்து, மனிதநேய ஆர்வலர், இயற்கை ஆர்வலர், கல்வி ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.பிளஸ் ௨ தேர்வில், 500க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாண-வியர், இளங்கலை வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று முது-கலை முதலாமாண்டு படிக்கும் மாணவியர், விளையாட்டு துறையை சார்ந்த முழுமையான சலுகை பெறும் மாணவிக-ளுக்கும், நடராஜன் அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. நிகழ்வில் தாளாளர் வெங்கடாச்சலம், துணை முதல்வர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தனலட்சுமி, கல்லுாரி பேராசி-ரியர், மாணவியர் என, 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்-டனர். தமிழ்த்துறை தலைவர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.
15-Aug-2024