உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் 4.20 மி.மீ., மழை பதிவு

கோபியில் 4.20 மி.மீ., மழை பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி-யுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ): அம்மாபேட்டை--2.80, வரட்டுபள்ளம் அணை-3.20, எலந்த-குட்டை மேடு-1, கொடிவேரி அணை-2, குண்டேரிபள்ளம் அணை-1.80, பவானி சாகர் அணை-2.60.ஈரோடு மாவட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு, பொதுமக்கள் குடிநீருக்கு பிரதானமான பவானி சாகர் அணைக்கு நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 24,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எதிர்பார்த்த மழை இல்லாவிட்-டாலும், அணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை