உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருமணம் செய்து வைக்க மறுத்த தாத்தாவை கொன்ற பேரன் கைது

திருமணம் செய்து வைக்க மறுத்த தாத்தாவை கொன்ற பேரன் கைது

காங்கேயம் : திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகேயுள்ள ந.கரையூரை சேர்ந்த சேமலை மகன் அருண்குமார், 27; மலையாத்தாபாளையத்தில் மணமான ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு, தாத்தா முனியப்பனிடம் கூறியுள்ளார்.இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், முனியப்பன் வைத்திருந்த கைத்தடியை பறித்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த நிலையில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு முனியப்பன், 70, இறந்து விட்டார். வழக்குப்பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி