உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குரு பூஜை விழா

ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குரு பூஜை விழா

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் குருபூஜை விழா நேற்று நடந்தது. கோட்ட நிர்வாகி கணேஷ், காவி நிறத்தின் சிறப்பு மற்றும் காவிக்கொடி வலியுறுத்தும் தியாக மனப்பான்மை குறித்தும், தேசத்திற்கு குடி-மக்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு குறித்தும் பேசினார். பின் காவிக்கொடிக்கு, மலர்கள் மற்றும் அட்சதை துாவி, அனைவரும் பூஜை செய்தனர். ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி தினேஷ்ராம், இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ், பா.ஜ., மாவட்ட நிர்வாகி ஐயப்பன் உள்பட திரளான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ