உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடி சில்லறை விற்பனை ஜவுளி சந்தையில் அதிகரிப்பு

ஆடி சில்லறை விற்பனை ஜவுளி சந்தையில் அதிகரிப்பு

ஈரோடு:ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நேற்று வாரச்சந்தை நடந்தது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில மொத்த வியாபாரிகள், கடைக்காரர்கள், மக்கள் கொள்முதல் செய்தனர்.இதுபற்றி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:ஆடி பண்டிகை சீசன் விற்பனை கடந்த, மூன்று வாரமாக நடந்து வருகிறது. நேற்றைய சந்தையில் சில்லறை விற்பனை, 45 சதவீதம் வரை நடந்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சில்லறை வியாபாரிகள், கடைக்காரர்கள் வந்தனர். கேரளாவில் அதிகமாக மழை பெய்து வருவதால், அம்மாநில வியாபாரிகள், மக்கள், கடைக்காரர்கள் குறைவாகவே வந்தனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில வியாபாரிகள் அதிகமாக கொள்முதல் செய்தனர். இன்னும் ஓரிரு வாரத்துக்கு விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ