உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஏழு பள்ளிகளுக்கு வாய்ப்பு

சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஏழு பள்ளிகளுக்கு வாய்ப்பு

ஈரோடு, வரும், 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.இதற்காக ஈரோடு கிரீன் பார்க் பள்ளி, எலவமலை கிரேஸ் பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு பள்ளி, திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளி, வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலை பள்ளி, சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளி, ஈரோடு கலைமகள் பள்ளிகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளின் மாணவ-மாணவியர், தேச பக்தியை வளர்க்கும் வகையிலான கலை நிகழ்ச்சியில் ஈடுபடுவர். 12ம் தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபடுவர் என்று, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ