உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெயிலால் மாட்டுச்சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு

வெயிலால் மாட்டுச்சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு

ஈரோடு:ஈரோடு அருகே கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் மதிப்பில் 50 கன்றுகளும், 25,000 ரூபாய் முதல் 65,000 ரூபாய் மதிப்பில் 300 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல் 85,000 ரூபாய் மதிப்பில் 320 பசு மாடுகள், 75,000 ரூபாய்க்கு மேலான விலையில் 50 கலப்பின மாடுகளும் வரத்தாகின.தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும் கடும் வெயிலால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. அதேசமயம் தண்ணீர் பற்றாக்குறையால் தமிழக விவசாயிகள் வியாபாரிகள் குறைவாகவே மாடுகளை வாங்கினர். வரத்தான கால்நடைகளில் 80 சதவீதம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.* புன்செய்புளியம்பட்டியில் நடந்த கால்நடை சந்தைக்கும் கடும் வெப்பத்தால் கால்நடைகளின் வரத்து வெகுவாக சரிந்தது. அதேசமயம் விலையும் வெகுவாக குறைந்தது. 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டிய மாடு, 20 ஆயிரம் ரூபாய்; 15 ஆயிரம் மதிப்பிலான வளர்ப்பு கன்று, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. கால்நடைகளின் விலை குறைந்ததால் ஒரு சில விவசாயிகள் மாடுகளை விற்காமல் திரும்ப கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்