தாராபுரம், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி முகாம் நாளை தொடங்குகிறது. தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன் தலைமையில், காலை, 10:00 மணி முதல், மாலை வரை நடக்கும்.நாளை தாராபுரம் உள் வட்டத்துக்கு உட்பட்ட சித்தராவுத்தன்பாளையம், நஞ்சியம்பாளையம், ஆலாம்பாளையம், கொளத்துப்பாளையம், நல்லாம்பாளையம், வீராட்சிமங்கலம், கொளிஞ்சிவாடி, தாராபுரம் வடக்கு, தெற்கு பகுதி மக்கள் பயன் பெறலாம். 21ம் தேதி அலங்கியம் உள் வட்டம், காங்கயம்பாளையம், சின்னக்காம்பாளையம், செலாம்பாளையம், ஊத்துப்பாளையம், தளவாய்பட்டினம், மணக்கடவு, அலங்கியம், கொங்கூர், பொம்மநல்லுார் பகுதிகளுக்கு நடக்கிறது.25ம் தேதி மூலனுார் உள்வட்டம் பெரமியம், துாரம்பாடி, சின்னமருதுார், குமாரபாளையம், கிளாங்குண்டல், மூலனுார், டி.காளிபாளையம், வெள்ளவாவிபுதுார், பொன்னிவாடி பகுதிகளுக்கு நடக்கிறது.26ம் தேதி கன்னிவாடி உள்வட்டம் கன்னிவாடி, நஞ்சை தலையூர், புஞ்சை தலையூர், சேனாபதிபாளையம், சுண்டக்காம்பாளையம், வேளாம்பூண்டி, அரிக்காரன்வலசு, எடைக்கல்பாடி, முளையாம்பூண்டி, புதுப்பை, ஏரசினம்பாளையம், தட்டாரவலசு பகுதிகளுக்கு நடக்கிறது.௨7ல் குண்டடம் உள்வட்டம் கொக்கம்பாளையம், நந்தவனம்பாளையம், காசிலிங்கம் பாளையம், குண்டடம், ஜோதியம்பட்டி, ஏரகாம்பட்டி, மானூர்பாளையம், முத்தியம்பட்டி, பெரிய குமாரபாளையம், நவநாரி, பெல்லம்பட்டி, வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், மேளாரப்பட்டி, மருதுார் பகுதிகளுக்கு நடக்கிறது.28ம் தேதி பொன்னாபுரம் உள்வட்டம் முண்டுவேலம்பட்டி, நாரணாபுரம், பொன்னாபுரம், கோவிந்தாபுரம், சின்னப்புத்துார், தொப்பம்பட்டி, மடத்துப் பாளையம், வரப்பாளையம் பகுதிகளுக்கு நடக்கிறது.ஜூலை 2ல் சங்கராண்டாம்பாளையம் உள்வட்டம் சூரியநல்லுார், கண்ணாங்கோவில், கொழுமங்குளி, சிறுகிணறு, வடுகபாளையம், சங்கரண்டாம்பாளையம், புங்கந்துறை, மாம்பாடி, நாதம்பாளையம் பகுதிகளுக்கு நடக்கிறது. இதில் மக்கள் கலந்து கொண்டு, குடும்ப அட்டை, விதவை உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் இதர துறை சார்ந்த கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம்.